Connect with us

பொழுதுபோக்கு

சீரியல அவங்க கர்ப்பமா இருக்கும்போது நானும் ப்ரக்னென்ட்; ஒரு‌ மாதம் வித்தியாசம்: திருமதி செல்வம் ரியல் ஃபேக்ட்ஸ்!

Published

on

thirumathi selvam

Loading

சீரியல அவங்க கர்ப்பமா இருக்கும்போது நானும் ப்ரக்னென்ட்; ஒரு‌ மாதம் வித்தியாசம்: திருமதி செல்வம் ரியல் ஃபேக்ட்ஸ்!

சன் தொலைக்காட்சியில் 2007-ம் ஆண்டு நவ.5 முதல் 2013ஆம் ஆண்டு மார்ச் 22 வரை ஒளிபரப்பான “திருமதி செல்வம்” என்ற தொலைக்காட்சித் தொடர், தமிழ் சின்னத்திரை வரலாற்றில் மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. விகடன் ஒளித்திரை தயாரிப்பில், எஸ். குமரன் இயக்கிய இந்தத் தொடர், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அதிக தொலைக்காட்சி இலக்கு அளவீட்டுப் புள்ளிகளையும் (TRP) பெற்று சாதனை படைத்தது.”திருமதி செல்வம்” தொடரின் மையக் கதை, “செல்வம்” என்ற கதாபாத்திரத்தைச் சுற்றியே நகர்கிறது. செல்வம் ஒரு நேர்மையான மற்றும் கடின உழைப்பாளி. இயந்திரங்களை பழுதுபார்க்கும் வேலை செய்து, தனது குடும்பத்திற்காக வருமானம் ஈட்டி, தனது தம்பி மற்றும் சகோதரியின் கல்விக்காக தனது படிப்பையும் தியாகம் செய்தவர். திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்திருந்த நிலையில், அர்ச்சனாவுடன் அவருக்குத் திருமணம் நடக்கிறது.கதையின் ஆரம்பத்தில் செல்வத்தின் நல்ல குணங்கள், கடின உழைப்பு, மனைவி அர்ச்சனா மீதான அன்பு ஆகியவை அவரை வாழ்வில் பெரும் உயரங்களுக்குக் கொண்டு செல்கின்றன. ஆனால், பணம், புகழ் மற்றும் அதிகாரம் ஆகியவை மெல்ல மெல்ல அவரை எவ்வாறு மாற்றி, அவரை ஒரு எதிர்மறை கதாபாத்திரமாக உருமாற்றுகிறது என்பதே தொடரின் விறுவிறுப்பான பகுதியாகும். இறுதியில், செல்வமும் அர்ச்சனாவும் தங்கள் வாழ்நாள் முழுவதும் பிரிந்து வாழ நேரிடுகிறது. செல்வம் தனது செல்வத்தையும் வாழ்க்கையையும் இழந்து நடைமேடைக்கு வந்து சேரும் துயரமான முடிவுடன் கதை நிறைவடைகிறது.”திருமதி செல்வம்” பொழுதுபோக்குத் தொடராக மட்டுமல்லாமல், சமூக யதார்த்தங்களையும், மனித உறவுகளின் சிக்கல்களையும், பணம் மற்றும் அதிகாரத்தின் விளைவுகளையும் தெளிவாகக் காட்டியது. இந்தத் தொடர் தமிழக அரசின் விருது, சிறந்த இயக்குனர், சிறந்த கதாபாத்திரம் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளது. நீண்ட நாட்கள் ஒளிபரப்பாகி, மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிப்போன இத்தொடர், இன்றும் பலரால் நினைவு கூரப்படும் சின்னத்திரை கிளாசிக் ஆக திகழ்கிறது. சமீபத்தில், பிகைண்ட்வுட்ஸ் நடத்திய நேர்க்காணலில், தனது மனைவியுடன் பங்கேற்ற சஞ்சீவ், சீரியல்களில் நடித்த காலகட்டத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். திருமதி செல்வம் சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்த அபிதாதான் என் ரியல் வைஃப்ன்னு பாதி பேர் நினைச்சிட்டாங்க” என்று சிரித்துக்கொண்டே கூறினார். “நான் இவளோட கல்யாணம் முடிஞ்ச உடனே இவ்வளவோட ஃபங்க்ஷனுக்கு போறேன். ஏன் சார் உங்க பொண்டாட்டியோட வராம இவங்களோட?” என்று ரசிகர்கள் குழம்பியதை வேடிக்கையாக கூறினார். அந்த சீரியலில் ஜோடியாக நடித்தவர் என்றும், ரசிகர்கள் சீரியல் கதாபாத்திரத்தையும் நிஜ வாழ்க்கையையும் போட்டுக் குழம்பியது அவருக்கு ஆச்சரியத்தை அளித்ததாகவும் கூறினார். இறுதியில், “ஐயோ அது சீரியல்லங்க. இதுதான் என் நிஜ வாழ்க்கையில” என்று தனது மனைவி குறித்து கலகலப்புடன் பேசினார்.சீரியலில் மனைவியாக இருந்த அபிதாவுடன் தனது நிஜ வாழ்க்கைத் துணைவியுடன் தனக்கிருந்த ஒற்றுமைகளையும் சஞ்சீவ் வியந்து பேசினார். இருவருக்கும் ஒரே மாதத்தில் திருமணம் நடைபெற்றது மட்டுமல்லாமல், இருவருக்கும் பெண் குழந்தைகள் பிறந்ததும் ஒரே மாதத்தில் என்றார். “அவங்களுக்கும் பெண் குழந்தை, எங்களுக்கும் பெண் குழந்தை. சோ, சீரியல்ல கர்ப்பிணியாக நடிக்கும்போது நான் வீட்ல பிரெக்னன்ட். அவங்க பிரெக்னன்ட்டாவே நடிச்சாங்க. ஆரம்பத்தில் சீரியலில் நடிக்கும்போது காதல் இல்லை என்றும், ஆனால் நிஜ வாழ்க்கையில் அது மலர்ந்தது குறித்தும் அவர் வெளிப்படையாகப் பேசினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன