Connect with us

இந்தியா

ஓட்டு கேட்கவாவது நேர்ல வருவீங்களா இல்ல வொர்க் ஃபிரம் ஹோம் ஆ.? சர்ச்சையில் சிக்கிய TVK தளபதி

Published

on

Loading

ஓட்டு கேட்கவாவது நேர்ல வருவீங்களா இல்ல வொர்க் ஃபிரம் ஹோம் ஆ.? சர்ச்சையில் சிக்கிய TVK தளபதி

அரசியலுக்கு வந்த பிறகு ஏராளமான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். ஆனால் அவர் எதற்கும் விளக்கமோ பதிலடியோ கொடுத்தது கிடையாது. என்னுடைய அரசியல் நாகரீகமானது என அவரே மாநாட்டில் தெரிவித்து இருந்தார்.

அதேபோல் அவருடைய அடுத்தடுத்த நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. ஆனால் தற்போது அவர் செய்திருக்கும் விஷயம் அவ்வளவு ஏற்புடையதாக இல்லை.

Advertisement

அதாவது ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அவர் நிவாரண உதவிகள் செய்துள்ளார். ஆனால் நேரில் சென்று இதை அவர் செய்யவில்லை.

பாதிக்கப்பட்டவர்களை பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வரவைத்து அங்கு பொருட்களை வழங்கி இருக்கிறார். அந்த செய்தி தான் இப்போது மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏன் இவர் நேரில் சென்று உதவிகளை செய்ய மாட்டாரா என்பது தான் இப்போதைய விமர்சனம்.

ஒரு நல்ல தலைவன் என்பது மக்களை களத்தில் சந்திப்பது தான். அதை விட்டுவிட்டு இருக்கும் இடத்திற்கு பாதிக்கப்பட்டவர்களை அலைக்கழிப்பது எந்த விதத்தில் நியாயம்? தேர்தலில் ஓட்டு கேட்கவாவது இவர் மக்களை சந்திப்பாரா? இல்லை ஒர்க் ஃப்ரம் ஹோம் ஆ என கடும் பேச்சுக்கள் கிளம்பியுள்ளது.

Advertisement

இதனால் கட்சி தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் சம்பந்தமில்லாத சாக்குபோக்கு சொல்லி வருகின்றனர். அதாவது கட்சியின் மூலம் பஸ்ஸில் மக்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுகின்றனர் என கூறி வருகின்றனர்.

ஆனாலும் இதை யாரும் கருத்தில் கொள்ளவில்லை. என்ன விஷயம் கிடைக்கும் விஜயை தாக்கலாம் என காத்திருந்தவர்களுக்கு இந்த ஒரு விஷயம் நல்ல பாயிண்டாக கிடைத்த விட்டது. ஒரு வேளை விஜய் களத்தில் இறங்கி இருந்தால் அவருடைய மதிப்பு இன்னும் உயர்ந்திருக்கும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன