சினிமா
துல்கர் சல்மான்41 படத்தின் பூஜை இன்று…! படக்குழு வெளியிட்ட அடுத்த அப்டேட்…!

துல்கர் சல்மான்41 படத்தின் பூஜை இன்று…! படக்குழு வெளியிட்ட அடுத்த அப்டேட்…!
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘காந்தா’. இதில் சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ், ராணா டகுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் இப்படம் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதோடு, வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளன.துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘காந்தா’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அவருடைய ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் டீசரை பகிர்ந்து வருகிறார்கள்.இந்நிலையில், துல்கர் சல்மான் நடிக்கும் அடுத்த படத்திற்கான பூஜை விழா இன்று நடைபெற்றது. இயக்குநர் ரவி நெலாகுடிடி இயக்கும் இப்படத்தில் இசை அமைப்பாளராக ஜிவி பிரகாஷ் பங்கேற்க உள்ளார். பூஜை நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.துல்கர் சல்மானின் ‘காந்தா’ மற்றும் புதிய படத்துக்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ரசிகர்கள் இவை குறித்த மேலும் தகவல்களை ஆவலுடன் எதிர்நோக்கி வருகிறார்கள்.