உலகம்
ஏமன் கடற்கரையில் படகு கவிழ்ந்து 68அகதிகள் உயிரிழப்பு!

ஏமன் கடற்கரையில் படகு கவிழ்ந்து 68அகதிகள் உயிரிழப்பு!
ஏமன் கடற்பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 12 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதோடு, 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
74 பேர் கடலில் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆபிரிக்காவின் எத்தியோப்பியாவில் இருந்து 154 பேர் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோத அகதிகளாக நுழையும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
மத்திய தரைக்கடலில் ஏமன் கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அகதிகளின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.