Connect with us

இலங்கை

பாடசாலை அதிபரை மாற்ற தண்ணீர் தொட்டியில் விஷம் கலப்பு; சம்பவத்தால் பகீர்

Published

on

Loading

பாடசாலை அதிபரை மாற்ற தண்ணீர் தொட்டியில் விஷம் கலப்பு; சம்பவத்தால் பகீர்

  மதவெறுப்பால் இந்தியாவின் கர்நாடகாவில் பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்து சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெல்காம் மாவட்டத்தில் சவதாட்டி தாலுகாவின் உள்ளது ஹூலிகட்டி என்ற கிராமம்.

Advertisement

இங்கு அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் பாடசாலை அதிபராக இஸ்லாமியர் ஒருவர் உள்ளமை அங்குள்ள சிலருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகின்றது.

பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் சுலைமான் என்கிற இஸ்லாமியரை பணியிடம் மாற்றம் செய்வதற்காக, அங்குள்ள இந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தண்ணீர் தொட்டியில் பூச்சி மருந்து கலந்துள்ளனர்.

இதில் 11 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம், ஹூள்ளிக்கட்டி பகுதியில் அரசுப்பள்ளி இயங்கி வருகிறது. அங்கு சுலைமான் கொரிநாயக் என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார்.

கிட்டத்தட்ட 13 வருடங்களாக அவர் அங்கு பணியாற்றி வருகிறார்.

உள்ளூர் கிராம மக்களிடம் அவர் மிகவும் நல்ல உறவில் இருக்கிறார்.

Advertisement

அதேநேரத்தில் அவர் முஸ்லிம் என்பதால், இந்து மற்றும் வலதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அவருக்கு எதிராக இருந்துள்ளனர்.

அதனால் தலைமை ஆசிரியர் சுலைமானை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று இந்து இயக்கங்கள் கூறி வந்துள்ளனர். ஆனால், அவரின் சிறப்பான சேவை காரணமாக பணியிடமாற்றம் செய்யவில்லை.

இதையடுத்து அவருக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்தி, பள்ளியில் இருந்து மாற்றி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ள விசமிகள், பாடசாலை தண்ணீர் தொட்டியில் விஷத்தை கலந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

15 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில் பல குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை என கூறப்படுகின்றது.      

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன