சினிமா
நடிகையை புகழ்ந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்…! காரணம் என்ன தெரியுமா?

நடிகையை புகழ்ந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்…! காரணம் என்ன தெரியுமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி சமீபத்தில் ஒரு ஜீன்ஸ் பிராண்டுக்காக செய்துள்ள விளம்பரத்தில், “சிறந்த ஜீன்ஸ் சிட்னிக்கே உள்ளது” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விளம்பரத்தை பாராட்டும் வகையில் டிரம்ப் தனது ட்ருத் சோசியல் பக்கத்தில், “நான் அந்த விளம்பரத்தை மிகவும் விரும்பினேன். சிட்னிக்கு மிக அருமையான ஜீன்ஸ் இருக்கிறது. அது உண்மையிலேயே சிறந்தது!” என பதிவிட்டார்.அவரது இந்த கருத்து பலரிடையே கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. ஒரு அதிபராக இருக்க வேண்டிய மரியாதையும், பெண்களுக்கு மரியாதை காட்டும் விதமாக இல்லாத கருத்தாக இது பாரபட்சம் அடைவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.சிலர் அவரது கருத்தை நேர்மையான பாராட்டாக எடுத்துக்கொண்டாலும், பலர் அவர் தனது பெண் ஆதரவாளர்களை சென்றடைய ‘objectification’ சாயலில் பேசியதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். இது முன்பும் பெண்களை குறித்த அவரது சர்ச்சைக்குரிய கருத்துகள், மற்றும் போக்குகளை நினைவுபடுத்துவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.