இலங்கை
பொலிஸ் அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல் ; வீட்டிலிருந்தபோது அரங்கேற்றப்பட்ட கொடூரம்

பொலிஸ் அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல் ; வீட்டிலிருந்தபோது அரங்கேற்றப்பட்ட கொடூரம்
களுத்துறை, எகொட உயன காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் அதிகாரி மீது ஆயுதமேந்திய குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
களுத்துறை, நாகொட, வெனிவெல்கொட பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வாள்கள் மற்றும் தடிகளுடன் ஆயுதமேந்திய பத்து பேர் கொண்ட குழு அந்த காவல் அதிகாரியைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதலில் காயமடைந்த அதிகாரி களுத்துறை போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராகச் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததால் ஆத்திரமடைந்த குழுவினர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது.