இலங்கை
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மணல் விவகாரம் ; அம்பலப்படுத்திய அர்ச்சுனா

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மணல் விவகாரம் ; அம்பலப்படுத்திய அர்ச்சுனா
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்காக வருடந்தோறும் குறிப்பிட்ட மணல் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இருந்து பிரதேச மக்களின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக கடந்த காலங்களில் முறையற்ற மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டமையால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நல்லூர் ஆலயத்திற்கு கூட இனிமேல் மணல் மண் விநியோகிக்கமுடியாதென்று பருத்தித்துறை பிரதேச செயலர் உதயகுமார் யுகதீஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுவரை காலமும் நல்லூர் மணல் விவகாரத்தில் பாரிய கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அடுத்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இந்த விடயம் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் பல விடயங்களை இந்த காணொளி மூலம் காணலாம்….