இலங்கை
நாட்டில் தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

நாட்டில் தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
நாட்டில் தேங்காய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, சாதாரண அளவிலான தேங்காய் ஒன்றின் சில்லறை விலையில் 185 முதல் 205 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் சிறிய தேங்காய் ஒன்று 160 முதல் 190 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை கண்டியில் உள்ள தலதா மாளிகையில் நடைபெறும் எசல பெரஹெராவிற்கு தேவையான கொப்பரையை வாங்குவதில் அதிக செலவு ஏற்பட்டுள்ளதாக தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.
எசல பெரஹெராவிற்கு இருபது மெட்ரிக் டன் கொப்பரை தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பெரஹெராவின் போது, ஒரு கிலோ கொப்பரை ரூ. 250-350 வரை வாங்கப்பட்டது.
இருப்பினும், இந்த முறை ஒரு கிலோ கொப்பரை ரூ. 500-600 வரையான விலையில் வாங்கப்பட்டுள்ளதாக தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.
முன்னதாக பொருட்கள் விலை குறைப்பை எதிர்வரும் 3 வருடங்களுக்கு மேற்கொள்ள முடியாது என வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பி.சரத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.