பொழுதுபோக்கு
கூலி vs வார் 2; அமெரிக்காவில் அடித்து நொறுக்கிய ரஜினி: முன்பதிவில் வார் 2 படத்திற்கு வீழ்ச்சி!

கூலி vs வார் 2; அமெரிக்காவில் அடித்து நொறுக்கிய ரஜினி: முன்பதிவில் வார் 2 படத்திற்கு வீழ்ச்சி!
இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள கூலி திரைப்படம், சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், அதே நாளில் ஹ்ரித்திக் ரோஷன் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில், வார் 2 திரைப்படம் வெளியாக உள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்2025 சுதந்திர தினம், இந்திய சினிமா ரசிகர்களுக்கு ஒரு பாக்ஸ் ஆபிஸ் திருவிழா போல் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது, தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் ஒருபுறம், பாலிவுட் மற்றும் டோலிவுட் நட்சத்திரங்களான ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் கூட்டணியில், இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வார் 2’ திரைப்படம் மறுபுறம், ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கின்றன.இந்த இரு படங்களுக்குமே இந்தியாவில் இன்னும் முன்பதிவு தொடங்காத நிலையில், அமெரிக்காவில் இரு படங்களுக்குமான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. அதன்படி இதுவரையிலான நிலவரப்படி, முன்பதிவில், ‘கூலி’ திரைப்படம், ‘வார் 2’-ஐ விட மிகத் தெளிவான முன்னிலையில் உள்ளது.அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் கூலி சாதனைவட அமெரிக்காவில் ‘கூலி’ திரைப்படத்தின் முன்பதிவு தற்போது 1.06 மில்லியன் டாலரை தாண்டியுள்ளது. இதன்மூலம் வட அமெரிக்காவில் முன்பதிவில் 1 மில்லியன் டாலர் என்ற இலக்கை வேகமாக எட்டிய தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதில், அமெரிக்கா மட்டும் 850K டாலர் கிடைத்துள்ளது, அங்கு 35,000 டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்பனையாகியுள்ளன. சாக்னிக் தகவலின்படி, அமெரிக்காவில் மட்டும் 430 திரையரங்குகளில் 1147 காட்சிகளில் கூலி வெளியாகிறது.இந்த சாதனை மூலம், முன்பதிவில் 1 மில்லியன் டாலரை கடந்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலில் ‘கூலி’ இணைந்துள்ளது. இந்தப் பட்டியலில் ஏற்கெனவே பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ரஜினிகாந்தின் ‘கபாலி’ (1.92 மில்லியன் டாலர்), லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ (1.86 மில்லியன் டாலர்), மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் I’ (1.1 மில்லியன் டாலர்) ஆகியவை உள்ளன. தற்போது 4-வது இடத்தில் ‘கூலி’ இடம்பிடித்துள்ளது.வார் 2 பின்தங்கியிருப்பது ஏன்?வார் 2 திரைப்படம், ‘கூலி’யுடன் ஒப்பிடும்போது பாக்ஸ் ஆபிஸில் பின்தங்கியுள்ளது. வட அமெரிக்காவில் இதுவரையில் 168K டாலர் வசூலை ஈட்டியுள்ளது. இது 582 திரையரங்குகளில் 1585 காட்சிகளுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 150.9K டாலர் அமெரிக்காவிலிருந்து மட்டுமே வந்துள்ளது. தற்போதுள்ள வேகத்தில் ‘வார் 2’ திரைப்படம், முன்பதிவில் 1 மில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டுமா என்பது சந்தேகமே.இருப்பினும், ‘வார் 2’ திரைப்படம், ஜூனியர் என்டிஆரின் முந்தைய படமான ‘தேவரா’-வின் சாதனையை முறியடித்துள்ளது. ‘தேவரா’ 100K டாலர் வரை முன்பதிவை 11 மணி நேரத்தில் எட்டியது. ஆனால், ‘வார் 2’ அதை ஏழு மணி நேரத்திலேயே எட்டியுள்ளது. இதன் மூலம், வட அமெரிக்காவில் வேகமாக 100K டாலர் முன்பதிவை எட்டிய இந்தியப் படம் என்ற சாதனையை ‘வார் 2’ படைத்துள்ளது.வார் 2, ஹ்ரித்திக் ரோஷன், டைகர் ஷெராப் நடித்த ‘வார்’ படத்தின் தொடர்ச்சியாகும். இதில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் அஷுதோஷ் ராணா ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களில் தொடர்வதுடன், ஜூனியர் என்டிஆர் மற்றும் கியாரா அத்வானி போன்றோர் புதியதாக இணைகின்றனர். இது ஆதித்யா சோப்ராவின் ஒய்.எஸ்.ஆர் (YRF) ஸ்பை யுனிவர்ஸின் அடுத்த பாகமாகும். ‘கூலி’ திரைப்படம், லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்)-இன் ஒரு பகுதியாக இந்த படம் இருக்காது என்று கூறியுள்ளார்.இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், பூஜா ஹெக்டே, சத்யராஜ் மற்றும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் அமீர்கான் ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டு படங்களும் ஆகஸ்ட் 14 அன்று வெளியாகின்றன.