இலங்கை
சட்ட விரோத கசிப்பு உற்பத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கை!

சட்ட விரோத கசிப்பு உற்பத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கை!
கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 24 மணி நேர சட்ட விரோத கசிப்பு உற்பத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்று (04) மாலை சூட்சுமமான முறையில் பயணப் பொதியில் மறைத்து பேருந்தில் எடுத்துச் செல்ல முற்பட்ட சந்தேகநபர்கள் இருவர் புளியம்பொக்கணைப் பகுதியில் கைது செய்யப்பட்டனர். இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 30 லீற்றர் கசிப்பும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இன்று (05) தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக பெரியகுளம் கட்டைக்காட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் 50 லீற்றர் கசிப்பு 60 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசாநாயக தெரிவித்துள்ளார்.