Connect with us

தொழில்நுட்பம்

நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ ஃப்ரீ… ஏர்டெல்லின் ஓடிடி சந்தா கொண்ட அட்டகாசமான பிளான்கள்!

Published

on

Best Airtel plans

Loading

நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ ஃப்ரீ… ஏர்டெல்லின் ஓடிடி சந்தா கொண்ட அட்டகாசமான பிளான்கள்!

இணையத்தின் வளர்ச்சியால், ஸ்மார்ட்போன்கள் நமது வாழ்க்கையின் ஒருபகுதியாக மாறிவிட்டன. ஸ்மார்ட்போன்கள் வங்கிச் சேவைகள், ஷாப்பிங் போன்ற பல பணிகளுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், அன்லிமிடெட் பொழுதுபோக்கையும் வழங்குகின்றன. கிரிக்கெட், நிகழ்ச்சி அல்லது திரைப்படங்கள் என எதுவாக இருந்தாலும், ஓடிடி தளங்கள் ஸ்மார்ட்போன்களில் சிறந்த அனுபவத்தைத் தருகின்றன.அனைத்து டேட்டா திட்டங்களும் ஓடிடி சந்தாக்களை வழங்குவதில்லை. ஆனால், சிறந்த இண்டெர்நெட் ஓடிடி சந்தாக்களையும் வழங்குவதில் ஏர்டெல் நிறுவனம் முன்னணி வகிக்கிறது. வரம்பற்ற பொழுதுபோக்கிற்காக, அதிவேக இணையத்துடன் இலவச ஓடிடி சந்தாக்களையும் ஏர்டெல் வழங்குகிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஜியோ ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் போன்ற பிரபலமான OTT தளங்கள் ஏர்டெல் திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஏர்டெல் ஓடிடி டேட்டா திட்டங்கள் ரூ.181-ல் இருந்து தொடங்குகின்றன. இந்த திட்டங்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.ரூ.181 திட்டம்: ஏர்டெலின் மலிவான டேட்டா திட்டங்களில் ஒன்று. இந்த திட்டத்தில், 30 நாட்களுக்கு 15GB டேட்டா கிடைக்கிறது. மேலும், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது. இந்தச் சேவை சோனி லிவ், லயன்ஸ்கேட் ப்ளே, ஹோய்சோய், சௌப்பல், சன் நெக்ஸ்ட் போன்ற 22 OTT தளங்களுக்கு அணுகலை வழங்குகிறது.ரூ.451 திட்டம்: இத்திட்டத்தில், 30 நாட்களுக்கு 50GB டேட்டா கிடைக்கிறது. கூடுதலாக, இத்திட்டம் ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது.ரூ.598 திட்டம்: இந்தத் திட்டத்தில், ஒரு நாளைக்கு 2GB டேட்டா வீதம் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்களும் இதில் அடங்கும். இது நெட்ஃப்ளிக்ஸ் பேசிக், ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 பிரீமியம் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் ஆகிய 4 இலவச ஓடிடி சந்தாக்களை வழங்குகிறது. மேலும், 30 நாட்களுக்கு இலவச ஹலோ ட்யூன்ஸ், ஒரு வருடத்திற்கு பெர்ப்ளக்சிடி ப்ரோ AI-க்கான இலவச சந்தாவும் இதில் உண்டு.ரூ.1,199 திட்டம்: இந்தத் திட்டம் அமேசான் பிரைம் வீடியோ லைட், எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் ஆகிய இலவச சந்தாக்களை வழங்குகிறது. 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2.5GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளுடன் இது நல்ல திட்டமாகும். மேலும், 30 நாட்களுக்கு இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் ஒரு வருடத்திற்கு பெர்ப்ளக்சிடி ப்ரோ AI-க்கான இலவச சந்தாவும் இதில் அடங்கும்.ரூ.1,729 திட்டம்:  இத்திட்டத்தில், நெட்ஃப்ளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார் சூப்பர், ஜீ5 பிரீமியம் ஆகிய இலவச சந்தாக்கள் வழங்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 2GB டேட்டா வீதம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் இத்திட்டத்தில், அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒருநாளைக்கு 100 SMS-களும் உண்டு. 30 நாட்களுக்கு இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் ஒரு வருடத்திற்கு பெர்ப்ளக்சிடி ப்ரோ AI-க்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன