சினிமா
‘Single pasanga..’ இவங்க தான் Judges ஆஆ.? பிரபல சேனல் வெளியிட்ட பிக் நியூஸ்

‘Single pasanga..’ இவங்க தான் Judges ஆஆ.? பிரபல சேனல் வெளியிட்ட பிக் நியூஸ்
இந்திய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் இடையே பல்வேறு போட்டி நிலவுவதோடு பார்வையாளர்களை தம் பக்கம் கவர்ந்தெடுப்பதற்காக பல ரியாலிட்டி ஷோக்களையும் சீரியல்களையும் போட்டி போட்டு ஒளிபரப்பாக்கி வருகின்றனர்.அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமானதாக சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆகியவை முக்கியத்துவம் வகிக்கின்றன.இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புத்தம் புதிதாக ரியாலிட்டி ஷோ ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாக உள்ளது. இதில் நடுவர்களாக இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் களமிறங்கி உள்ளதோடு இவருடன் சீரியல் பிரபலமான ஆலியா மானசா மற்றும் பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான ஸ்ருதிகா அர்ஜுனும் பங்கேற்று உள்ளார். தற்போது இது தொடர்பான தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என்பன சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருவதோடு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.’சிங்கிள் பசங்க’ என்ற தலைப்போடு ஆரம்பிக்கப்பட உள்ள இந்த ரியாலிட்டி ஷோ, பல இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவுள்ளது. எனினும் இது எப்படிப்பட்ட கேம் ஷோ என்பது சஸ்பென்ஸ் ஆகவே காணப்படுகின்றது.இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பார்த்திபன், ஸ்ருதிஹா அர்ஜுன், மணிமேகலை மற்றும் ஆலியா மானசா இணைந்துள்ளதால் இந்த ஷோ மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.