Connect with us

உலகம்

அதிபர் ட்ரூங் மை லானின் மரண தண்டனை உறுதி!

Published

on

Loading

அதிபர் ட்ரூங் மை லானின் மரண தண்டனை உறுதி!

வியட்நாமின் மிகப்பெரிய மோசடி வழக்கில், ரியல் எஸ்டேட் அதிபர் ட்ரூங் மை லானின் மரண தண்டனை நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம், 68 வயதான அவர், தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான மேல்முறையீட்டை இழந்துள்ளார்.
அவரின் மோசடி தொடர்பான அளவு நாட்டின் பொருளாதாரம் பற்றிய கவலைகளை எழுப்பியது.

Advertisement

வியட்நாமின் 2022 மொத்த வெளிநாட்டு கையிருப்பில் கிட்டத்தட்ட 3%, 12.5 பில்லியன் டொலர் அளவுக்கு மோசடி மற்றும் இலஞ்சம் கொடுத்ததற்காக அவர் கடந்த ஏப்ரல் மாதம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.

எனவே, கடந்த 2012 மற்றும் 2022 க்கு இடையில் வான் தின் பாட் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவராக இருந்த அவர், சைகோன் கூட்டுப் பங்கு வர்த்தக வங்கியை சட்டவிரோதமாக கட்டுப்படுத்திமை மற்றும் 2,500 கடன்களை அனுமதித்ததாகவும் இதனால் வங்கிக்கு 27 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, தண்டனைக்கு எதிரான அவரது மேல்முறையீட்டை ஹோ சிமின் நீதிமன்றம் நிராகரித்த, அதே சமயம் நான்கில் ,மூன்றில் ஒரு பங்கு இழப்பை ஈடுசெய்தால், அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றலாம் என்றும் பரிந்துரைத்தமை குரிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன