இந்தியா
இயற்கை பேரிடர்களுக்கு நாமே காரணம் – உயர் நீதிமன்றம் வேதனை

இயற்கை பேரிடர்களுக்கு நாமே காரணம் – உயர் நீதிமன்றம் வேதனை
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; அவற்றுக்கு நாமே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
ஊட்டி கொடைக்கானல் கொண்ட மலைவாச தலங்களில் பிளாஸ்டிக் க்கு தடை விதிப்பது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரதசக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உலக நாடுகளில் பிளாஸ்டிக் களை குப்பைத் தொட்டியில் போடுகின்றனர். ஆனால் நாம் தான் அவற்றை தூர வீசுகிறோம் என தெரிவித்தனர்.
மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஓரங்களில் இருந்து டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், இனிவரும் காலங்களில் பேரிடர்களுக்கு இயற்கையை குறை கூற முடியாது என்றும் அவற்றுக்கு நாமே காரணம் என்றும் வேதனை தெரிவித்தனர்.
Also Read :
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 04) விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
உரிமைகளைப் பற்றி பேசும் மக்கள் தங்கள் கடமைகளை பற்றி கவலைப்படுவதில்லை என்று ஆதங்கம் தெரிவித்த நீதிபதிகள் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.