இலங்கை
டிசெம்பர் அரசின் வீழ்ச்சி ஆரம்பம் மாதத்திலிருந்து; ஆசு மாரசிங்க ஆரூடம்!
டிசெம்பர் அரசின் வீழ்ச்சி ஆரம்பம் மாதத்திலிருந்து; ஆசு மாரசிங்க ஆரூடம்!
இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சி எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியில் இருந்துதான் ஆரம்பமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:- புதிய அரசாங்கம் ஒன்று உருவாகி முதலாவது வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பித்து அதை நடை முறைப்படுத்தும் வரை செயற்படுவதற்கு இடங்கொடுக்க வேண்டும். இந்த அரசாங்கத்தால் நாட்டை இழுத்துச்செல்ல முடியுமா என்று இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதியாகும் போது தெரியவரும். அன்றுதான் அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகும்.
இந்த நாடு மீண்டும் வீழ்வதை நாம் விரும்பவில்லை. மீண்டும் 2022ஆம் ஆண்டை நோக்கிப் போவதை நாம் விரும்பவில்லை. அரசாங்கம் இனியாவது நிலைமையை உணர்ந்து செயற்பட வேண்டும். இன்னும்கூட காலம் உள்ளது. ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இன்னமும் தங்களை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றே நினைத்துக்கொண்டிருக்கின்றனர். டொலரைச் சேமிப்பதற்கு இவர்கள் செய்கிற திட்டங்கள் எல்லாம் பிழையானவை. வாகனங்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் அதிகமான டொலர் குறையும்.
2028ஆம் ஆண்டில் கடனை அடைக்க முடியாமல் பெரும் சிக்கலுக்குள் இந்த நாடு தள்ளப்படும். 2028ஆம் ஆண்டுக்கு முன் வெளிநாட்டு முதலீடுகள் 10 பில்லியனாக இருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் – என்றார்.
