பொழுதுபோக்கு
அப்பாவுடன் நெருங்கிய நட்பு; மகளுடன் காதல், ரொமான்ஸ்; தயங்கிய நடிகருக்கு தைரியம் சொன்ன நடிகை!

அப்பாவுடன் நெருங்கிய நட்பு; மகளுடன் காதல், ரொமான்ஸ்; தயங்கிய நடிகருக்கு தைரியம் சொன்ன நடிகை!
2015 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் படமான ‘பிரேம் ரத்தன் தன் பயோ’வில் சோனம் கபூரும் சல்மான் கானும் இணைந்து நடித்தனர் . ஒரு நேர்காணலில், சோனம் கபூர், சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றிய தனது அனுபவத்தைப் பற்றிப் பேசியுள்ளார். குறிப்பாக சல்மான் கானின் தந்தை நடிகர் அனில் கபூருடனான நீண்டகால நட்பு காரணமாக, அந்தக் கதாபாத்திரத்தில் வந்த தனித்துவமான சவால்களை வெளிப்படுத்தினார்.” ‘பிரேம் ரத்தன் தன் பாயோ’வில் என்னுடன் இணைந்து பணியாற்ற சல்மான் தயங்கினார் ,” என்று சோனம் கபூர் ஒப்புக்கொண்டார். “அவர் என் தந்தையின் நெருங்கிய நண்பர், அவருடன் பிவி நம்பர் 1 மற்றும் நோ என்ட்ரி போன்ற படங்களில் நடித்துள்ளார் . தனது நண்பரின் மகளை திரையில் காதலிக்கும் யோசனை அவருக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.” என்று விவரித்துள்ளார். இந்த வேடத்தில் நடிக்க சல்மான் கான் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் எடுத்ததாக கூறப்படுகிறது. “ஆரம்பத்தில் சோனம் கூடவே பணிபுரிய எனக்கு விருப்பமில்லை. சூரஜ் பர்ஜாத்யா எப்படியோ என்னை சமாதானப்படுத்தினார். சூரஜின் படங்களில் உள்ள காதல் காட்சிகள் மிகவும் தனித்துவமானது, அது ஒரு சவாலாக இருந்தது. ஆனால் சோனம் தான் சரியான பொருத்தம்.” என்று அவர் பின்னர் கூறியுள்ளார். சோனம் கபூருக்கு அப்படி எந்த யோசனையும் இல்லை. “எனக்கு அது விசித்திரமாகத் தெரியவில்லை. அவருடன் பணிபுரிவதை நான் மிகவும் ரசித்தேன்,” என்று அவர் கூறினார். “நான் அவரது எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன், அவர் எனக்கு குடும்பம் தான். அவருடைய தந்தையையும் எனக்கு நன்றாகத் தெரியும்.” என்று சோனம் தெரிவித்துள்ளார். மைனே பியார் கியா (1989), ஹம் ஆப்கே ஹை கோன் ஆகியவற்றைத் தொடர்ந்து சல்மான் கான் மற்றும் ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் இடையேயான நான்காவது காம்போவை குறிக்கும் பிரேம் ரத்தன் தன் பாயோ 2015 இன் இரண்டாவது அதிக வசூல் செய்த படமாக மாறியது. இயக்குனர் சூரஜ் பர்ஜாத்யா, முதலில் நாயகியின் பெயரைக் குறிப்பிடாமல் சல்மான் கானிடம் ஸ்கிரிப்டை விவரித்ததாகத் தெரிவித்துள்ளார். “எனக்கு ஒரு புதிய முகம் வேண்டும் என்று தோன்றியது, ராஞ்சனாவைப் பார்த்த பிறகு , சோனம் கபூர் அந்தக் கதாபாத்திரத்திற்கு சரியானவர் என்று உணர்ந்தேன்.” என்று அவர் கூறியுள்ளார். சூரஜ் பர்ஜாத்யா இறுதியாக சோனம் கபூரின் புகைப்படத்தை சல்மான் கானிடம் காட்டியபோது, அவர் மிகவும் ஆச்சரியமாகிவிட்டாராம்.”சல்மான் என்னைப் பார்த்து யோசிக்க நேரம் தேவை என்று கூறினார். ஒரு மாதம் முழுவதும் கடந்துவிட்டது. வயது வித்தியாசத்தைப் பற்றி அவர் கவலைப்பட்டார்.சோனம் மிகவும் உயரமாகவும், மிகவும் இளமையாகவும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் வளர்வதைப் பார்த்த பிறகு, திரையில் அவரை காதலிப்பதை அவரால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.” என்று இயக்குனர் கூறியுள்ளார்.