பொழுதுபோக்கு
வெயிட்லிப்ட் தூக்கியதால் வந்த வினை: 6 வாரங்களாக அவதிப்படும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

வெயிட்லிப்ட் தூக்கியதால் வந்த வினை: 6 வாரங்களாக அவதிப்படும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் 6 வாரமாக படுத்த படுக்கையாக இருப்பதால், அவருக்கு என்ன ஆச்சு என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதற்கு அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலுடன் பதிவிட்டுள்ளார்.2009-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கில்லி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து கிரிட்டம் என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும், யுவன் என்ற படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். தமிழில் 2-வது படமாக அருண்விஜயுடன் இவர் நடித்த தடையற தாக்க படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தது பலருக்கு தெரியவில்லை.அதன்பிறகு என்னமோ ஏதொ என்ற தமிழ் படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் அடுத்து தெலுங்கில் கவனம் செலுத்தினார். நீண்ட இடைவெளிக்கு பின் தீரன் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார். இந்த படம் ரகுல் ப்ரீத் சிங்குக்கு தமிழில் பெரிய பாராட்டுக்களை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல், தடையற தாக்க படத்தில் நடித்தது இவர்தான் என்பது பலருக்கும் தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து ஸ்பைடர், என்.ஜி.கே, உள்ளிட்ட படங்களில் நடித்த ரகுல் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் மிகுந்த அக்கரையுடன் இருக்கும் ரகுல் ப்ரீத் சிங். அவ்வப்போது தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனிடையே தற்போது இவர் 80-கிலோ எடையை தூக்க முயற்சி செய்துள்ளார்.இந்த வெயிட்லிப்டை தூக்க முடியாமல் திணறிய அவருக்கு மூச்சுப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது, இதில் இருந்து மீள முடியால் கடந்த 6 வாரங்களாக தவித்து வருகிறார். இது குறித்து அப்போதே பதிவிட்டிருந்த ரகுல் ப்ரீத் சிங், “நான் செய்த முட்டாள் தனமான தவறு இன்று எனக்கு பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் விரைவில் குணமடைய வேண்டும். இதன் மூலம் எனது வாழ்க்கையில் முக்கியமான பாடம் ஒன்றை கற்றுக்கொண்டேன்” என்று பதிவிட்டிருந்தார்.ஒரு வாரத்தில் குணமாகிவிடும் என்று எதிர்பார்த்த ரகுல் ப்ரீத் சிங் தற்போது 6 வாரமாக படுத்த படுக்கையாக இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், முதுகு பிடிப்பு ஏற்பட்டதை பொருட்படுத்தாமல், உடற்பயிற்சி செய்து முடித்துவிட்டு படப்பிடிப்புக்கு சென்றபோது, முதுகு வலி மேலும் அதிகமானது. அந்த வலியால் துடிதுடித்து போனேன். நான் இன்னும் முழுமையாக குணமாகவில்லை. இன்னும் ஒரு சில வாரங்களில் குணமாகிவிடுவேன் என்று கூறியுள்ளார்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”