Connect with us

இலங்கை

சுயாதீன ஊடகவியலாளருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பாணை

Published

on

Loading

சுயாதீன ஊடகவியலாளருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பாணை

  பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு வாக்கு மூலம் வழங்க வருமாறு , சுயாதீன ஊடகவியலாளர் க. குமணனுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

எதிர்வரும் 17ஆம் திகதி காலை 10 மணிக்கு முல்லைத்தீவு அளம்பில் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து , பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு அழைப்பாணையில் , அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

அதேவேளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இல்லாமல் ஆக்குவோம் என ஆட்சிக்கு வந்த அனுர அரசாங்கம், தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் , ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் , விசாரணைகளை முன்னெடுத்து , அவர்களின் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன