சினிமா
லோகேஷ் கனகராஜ் & ரஜினிகாந்த் கூட்டணி வசூல் ரெக்கார்டு..!
லோகேஷ் கனகராஜ் & ரஜினிகாந்த் கூட்டணி வசூல் ரெக்கார்டு..!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்திருந்தார். நாகர்ஜுனா, அமீர் கான், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சௌபின் ஷாஹிர், உபேந்திரா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.இந்நிலையில் “கூலி” திரைப்படம், வெளியான முதல் நான்கு நாட்களில் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதிய நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.ஆனால் விமர்சன வேறுபாடுகளுக்கும் பின், திரைப்படத்தின் வசூல் உயர்ந்துகொண்டே வருகிறது. தற்போதைய தகவலின்படி, வெளியான 11 நாட்களில் “கூலி” ரூ.485 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.திரைப்படத்தின் ஆரம்ப நாட்களில் கூட்டம் குறைந்தாலும், வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என திரையுலக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே ரஜினி ரசிகர்கள் பெரும்பாலானவர்கள், இந்த திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை எட்டுமென எதிர்பார்த்து வருகின்றனர். அடுத்த சில நாட்களில் ரூ.500 கோடி வசூல் தொடும் வாய்ப்பும் உள்ளது.எனினும், ரூ.1000 கோடி சாதனை நிகழுமா என்பது, அடுத்த நாட்களில் வெளியாகும் வசூல் நிலவரத்தின் படியே உறுதியாக கூறலாம் என்கின்றனர் திரையுலகத்தினர்.
