சினிமா
500 கோடியை நெருங்கும் கூலி.. பாக்ஸ் ஆபிசில் சாதனை படைக்கும் ரஜினிகாந்த்
500 கோடியை நெருங்கும் கூலி.. பாக்ஸ் ஆபிசில் சாதனை படைக்கும் ரஜினிகாந்த்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.ஆனாலும் கூட, முதல் நான்கு நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.இந்த நிலையில், 12 நாட்களை கடந்திருக்கும் கூலி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்திருக்கும் வசூலை பற்றி தகவல் வெளியாகியுள்ளன.அதன்படி, 12 நாட்களில் உலகளவில் கூலி படம் ரூ. 490 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 500 கோடியை கண்டிப்பாக நெருங்கிவிடும்.இதன்மூலம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 2.0, ஜெயிலர் படங்களை தொடர்ந்து கூலியும் ரூ. 500 கோடி கிளப்பில் இணைகிறது. இந்த சாதனையை வேறு எந்த நடிகரும் தமிழ் சினிமாவில் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
