சினிமா
தமிழ் படத்தை பார்த்து சச்சின் சொன்ன அந்த வார்த்தை.. இதை எதிர்பார்க்கல!
தமிழ் படத்தை பார்த்து சச்சின் சொன்ன அந்த வார்த்தை.. இதை எதிர்பார்க்கல!
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 3BHK. இப்படத்தை ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர். மேலும், சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா ஆகியோர் நடித்திருந்தனர்.யதார்த்தமான கதைக்களத்தில் உருவாகி வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.இந்நிலையில், சச்சின் ரெடிட் வலைத்தளத்தில் ரசிகரின் கேள்விக்கு அளித்த பதில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.ரசிகர் ஒருவர் அவரிடம் சமீபத்தில் பார்த்து ரசித்த பேவரைட் படங்கள் குறித்து கேள்வி எழுப்ப, அதற்கு ‘நேரம் கிடைக்கும்போது படங்கள் பார்ப்பேன், அப்படி சமீபத்தில் பார்த்த 3BHK படம் மற்றும் Ata Thambyacha Naay என்ற மராத்தி படமும் பிடித்து இருந்தது என சச்சின் தெரிவித்துள்ளார்.இதற்கு 3BHK பட இயக்குநர் ஸ்ரீகணேஷ் ட்விட்டரில் ‘நீங்கள் தான் எனது குழந்தைப்பருவத்தில் ஹீரோ’ என குறிப்பிட்டு நன்றி கூறியுள்ளார்.
