உலகம்
இந்தியா மீது அமெரிக்கா மேலும் அதிக வரிகளை விதிக்கும் – டிரம்ப் எச்சரிக்கை!
இந்தியா மீது அமெரிக்கா மேலும் அதிக வரிகளை விதிக்கும் – டிரம்ப் எச்சரிக்கை!
இந்தியா மீதான இரண்டாம்கட்ட வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யாவிடம் மசகு எண்ணெய் வாங்கும் நாடுகளின் மீது வரிவிதிக்கப்படும் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்தியா மீது 25 சதவீத வரியை விதித்தார். இருப்பினும், தனது நீண்டகால நட்பு நாடான ரஷ்யாவிடம் இந்தியா தொடர்ந்து எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டது. இதனையடுத்து, இந்தியா மீது மேலும் 25 சதவிகித வரியை ட்ரம்ப் விதித்தது உலக பொருளாதார நாடுகளிடையேயும் பேசுபொருளாகியது.
இதனிடையே, ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்தும் பேச்சுவார்த்தையில் ட்ரம்ப்பும் ரஷ்ய ஜனாதிபதி புடினும் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில், அலாஸ்காவில் நடைபெறவுள்ள ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், இந்தியா மீதான வரி மேலும் அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து, அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்காட் பெசண்ட் தெரிகையில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லையெனில், வரி அதிகரிக்கப்படலாம். ரஷ்யாவிடம் மசகு எண்ணெய் வாங்கும் இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
