Connect with us

தொழில்நுட்பம்

க்யூஆர் கோடு, டிஜிட்டல் சேஃப்டி.. புதிய பான் 2.0 அறிமுகம்! ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

Published

on

pan 2.0

Loading

க்யூஆர் கோடு, டிஜிட்டல் சேஃப்டி.. புதிய பான் 2.0 அறிமுகம்! ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

வருமான வரித்துறை, பான் கார்டு சேவையில் பான் (PAN) 2.0 என்ற புதிய மின்னணு மேம்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய முறையில் உள்ள சிரமங்களைக் குறைத்து, விரைவான, பாதுகாப்பான மற்றும் வசதியான சேவையை இது வழங்கும்.PAN 2.0 என்றால் என்ன?பான் 2.0-வின் முக்கிய அம்சம், மின்னணு பான் (e-PAN) அட்டைதான். இதில், உடனடி சரிபார்ப்புக்கு உதவும் க்யூ.ஆர் குறியீடு இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் பான் அட்டையின் தவறான பயன்பாடு அல்லது நகலெடுப்பது தடுக்கப்படும். இந்த புதிய இ-பான் அட்டை, கட்டணமில்லாமல், நேரடியாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். அதேசமயம், வழக்கமான பிளாஸ்டிக் அட்டையை நீங்கள் விரும்பினால், அதற்கென ஒரு சிறிய கட்டணம் செலுத்த வேண்டும்.ஏற்கனவே பான் அட்டை வைத்திருப்பவர்கள் நிலை என்ன?நீங்கள் ஏற்கனவே பான் அட்டை வைத்திருந்தால், பயப்படத் தேவையில்லை. உங்களின் பழைய அட்டை தொடர்ந்து செல்லும். இந்தப் புதிய அமைப்புக்கு மாறுவது கட்டாயமில்லை, ஆனால் நீங்கள் விரும்பினால் மாறிக் கொள்ளலாம்.யார் PAN 2.0 பெறலாம்?தற்போது பான் அட்டை வைத்திருக்கும் அனைவரும் பான் 2.0-க்கு மாறத் தகுதியானவர்கள். புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. அதே சமயம், புதியதாக பான் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள், வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி, அடையாள மற்றும் முகவரிச் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.ஏன் இதை மாற்ற வேண்டும்?பான் 2.0 மூலம், பான் அட்டை தொடர்பான வேலைகள் விரைவாக முடிவடையும். தரவு அமைப்பு இப்போது மிகவும் பாதுகாப்பானது. பெரும்பாலான செயல்முறைகள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டதால், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், அரசின் நிர்வாகச் செலவையும் குறைக்கும்.ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?புதிய ஒருங்கிணைந்த இணையதளம் தொடங்கப்பட்ட பிறகு, விண்ணப்பிப்பது மிகவும் எளிது.அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.உங்களின் தனிப்பட்ட விவரங்களை நிரப்பவும்.ஆதார் அட்டை, முகவரிச் சான்று, பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும்.பிறகு, சமர்ப்பிப்பு பொத்தானை அழுத்தினால் போதும்.NSDL இ-பான் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் நேரடியாக உங்கள் இ-பான் அட்டையைப் பெறலாம். அட்டை வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள், அதை 3 முறை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன