உலகம்
இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய ஜேர்மனி!
இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய ஜேர்மனி!
ஜேர்மனி இஸ்ரேலுக்கான அனைத்து ஆயத ஏற்றுமதியையும் நிறுத்தியுள்ளது. காஸா நகரை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கியதைத் தொடர்ந்தே ஜேர்மனி இந்த ஆயுத ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது.
பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரிப்பதை இதற்கு மேலும் சகித்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள ஜேர்மனியின் சான்சிலர் காஸா பள்ளத்தாக்கில் மேலும் கடுமையான நடவடிக்கைகளுக்காக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி எவ்வாறு மாற்றம்பெறும் என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
