சினிமா
மீனாவிடம் கையும் களவுமாக சிக்கும் ரோகிணி.. சிறகடிக்க ஆசை பரபரப்பு ப்ரோமோ!
மீனாவிடம் கையும் களவுமாக சிக்கும் ரோகிணி.. சிறகடிக்க ஆசை பரபரப்பு ப்ரோமோ!
விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பித்த நாள் முதல் டிஆர்பியில் மாஸ் செய்து வரும் தொடர் சிறகடிக்க ஆசை. பரபரப்பின் உச்சமாக தற்போது இந்த தொடரின் கதைக்களம் ஓடிக் கொண்டிருக்கிறது.மனோஜ் ஒரு பள்ளிக்கு கெஸ்ட் ஆக செல்ல அவரது நண்பர் அழைக்கிறார். அப்போது பள்ளி பெயரை மனோஜ் சொல்ல ரோகிணி ஷாக் ஆகிறார்.அது கிரிஷ் படிக்கும் பள்ளி, அங்கு அவனை பார்த்துவிட்டால் என்ன ஆகுமோ என ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார்.இந்நிலையில், தற்போது வெளிவந்த ப்ரோமோவில் ரோகிணி தனது மகன் கிரிஷ்ஷை பள்ளியை விட்டு வெளியில் அழைத்து வந்து பேசுகிறார்.கிரிஷ் காரில் ஏறுவதை மீனா பார்த்துவிட்டு பின்னாலேயே ஓடுகிறார். இந்த முறையாவது சிக்குவாரா ரோகிணி என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
