Connect with us

பொழுதுபோக்கு

புற்றுநோய் பாதிப்பு: பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் நேத்ரன் மரணம்!

Published

on

nethran Death

Loading

புற்றுநோய் பாதிப்பு: பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் நேத்ரன் மரணம்!

சின்னத்திரையில் விஜய் டிவி மற்றும் சன்டிவி சீரியல்களில் நடித்து வந்த நடிகர் நேத்ரன், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் மரணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அண்ணன் கேரக்டரில் நடித்து வந்தவர் தான் நடிகர் நேத்ரன். மேலும் பல சீரியல்களில் நடித்து வந்த இவர், ஜோடி நம்பர் ஒன் என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார். நேத்ரனின் மனைவி தீபா நேரத்ரன், விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.மேலும் ஜீ தமிழின் மாரி சீரியலில் நாயகியின் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். நேத்ரனின் மகள், அபிநயா கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்திருந்தார். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனது அப்பா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேத்ரனின் மகள் அபிநயா வீடியோ ஒன்றைய வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பதிவு பெரும் வைரலாக பரவிய நிலையில், ரசிகர்கள் நெட்டிசன்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி வந்தனர்.நேத்ரனும் தற்போது தனது உடல் நிலையில் முன்னேற்றம் இருந்து வருவதாக தன்னம்பிக்கையுடன் பேசியிருந்தார். ஆனால் தற்போது நேத்ரன் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துவிட்டார். அவரது மறைவுக்கு சின்னத்திரை சின்னத்திரை பிரபலங்கள், நேத்ரனின் நண்பர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரஞ்சிதமே தொடரல் நடித்து வந்த நேத்ரன் ஏறக்குறைய 25 வருடங்கள் சின்னத்திரையில், பிரபல நடிகராக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன