தொழில்நுட்பம்
போன் ஸ்பீட் அதிகரிக்கணுமா?… ஃபைல்களை டெலீட் செய்யாமல் ஸ்பீட் செய்வது எப்படி? சிம்பிள் டிப்ஸ்!
போன் ஸ்பீட் அதிகரிக்கணுமா?… ஃபைல்களை டெலீட் செய்யாமல் ஸ்பீட் செய்வது எப்படி? சிம்பிள் டிப்ஸ்!
மெதுவாகச் செயல்படும் ஃபோன் எரிச்சலை உண்டாக்கும். ஒரு ஆப்ஸைத் திறக்கக்கூட நீண்ட நேரம் ஆகும்போது, உங்கள் ஃபோனை வேகமாகச் செயல்பட வைக்க ஃபைல்களையும், ஆப்ஸ்களையும் டெலீட் செய்வதுதான் ஒரே வழி என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மை இல்லை. முக்கியமான கோப்புகளையோ அல்லது செயலிகளையோ நீக்காமல், சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஃபோனின் வேகத்தை அதிகரிக்க முடியும். உங்கள் ஃபோன் மெதுவாகச் செயல்பட்டாலோ, திடீரென்று நின்றாலோ அல்லது நீண்ட நேரம் எடுத்து கொண்டாலோ, இந்த 3 எளிய வழிகள் மூலம் ஃபோனின் செயல்திறனை மேம்படுத்தலாம்.1. ஃபோனை தொடர்ந்து ரீஸ்டார்ட் செய்யவும்மெதுவாக இயங்கும் ஃபோனைச் சரிசெய்ய இது சிம்பிள் டிப்ஸ். உங்கள் ஃபோனை நீண்ட நேரம் பயன்படுத்தும்போது, அதன் பின்னணியில் இயங்கும் செயலிகள் மற்றும் தற்காலிக கோப்புகள் ஃபோனின் வேகத்தைக் குறைக்கலாம். ஃபோனை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம், ரேம் (RAM) சுத்தப்படுத்தப்படுகிறது. தேவையற்ற பின்னணி ஆப்கள் நிறுத்தப்பட்டு, சிஸ்டம் புதுப்பிக்கப்படுகிறது. ஃபோனை ஆஃப் செய்து, சில வினாடிகள் காத்திருந்து மீண்டும் ஆன் செய்யவும். இதை வாரத்திற்கு ஒருமுறை செய்வது உங்கள் ஃபோன் சீராக இயங்க உதவும்.2. சாப்ட்வேர் & ஆஃப்களை புதுப்பிக்கவும்பழைய சாப்ட்வேர் மற்றும் அப்டேட் செய்யப்படாத செயலிகள் உங்கள் ஃபோனின் வேகத்தைக் குறைக்கும். மென்பொருள் அப்டேட்கள், பிழைத் திருத்தங்கள் மற்றும் செயல்திறன் மேம்பாடுகளுடன் வருவதால், உங்கள் ஃபோன் வேகமாகச் செயல்படும். உங்கள் ஃபோனின் Settings > Software Update பகுதிக்குச் சென்று, கிடைக்கும் புதுப்பிப்புகளை இன்ஸ்டால் செய்யவும். ஆப்ஸ்களைப் பொறுத்தவரை, Google Play Store அல்லது App Store ஐத் திறந்து, ‘My Apps & Games’ பகுதிக்குச் சென்று அனைத்து ஆப்ஸ்களையும் அப்டேட் செய்யலாம்.3. கேச் (Cache) பைல்களை நீக்கவும்கேச் பைல்கள் என்பவை செயலிகள் வேகமாக இயங்குவதற்காகச் சேமிக்கப்படும் தற்காலிகத் தரவுகளாகும். ஆனால், காலப்போக்கில் இந்தக் கோப்புகள் அதிகமாகச் சேமிக்கப்பட்டு ஃபோனை மெதுவாக்கும். கேச் கோப்புகளை நீக்குவது முக்கியமான கோப்புகளை நீக்காமல் ஃபோனின் இடத்தை அதிகரித்து, அதன் செயல்திறனை மேம்படுத்தும். ஆண்ட்ராய்டு ஃபோன்களில் Settings > Storage > Cached Data பகுதிக்குச் சென்று அதைச் சுத்தப்படுத்தவும். ஐபோன்களில் Settings > Safari > Clear History and Website Data பகுதிக்குச் சென்று சஃபாரி ப்ரவுசரின் கேச்சை நீக்கவும்.இந்த எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் ஃபோன் வேகமாகச் செயல்படுவதுடன், எந்த முக்கியமான டேட்டா இழக்காமல் பாதுகாக்கலாம்.
