பொழுதுபோக்கு
சும்மா 4 வார்த்த, முடிச்சா ஒரு கப் காபி; மீண்டும் சந்தோஷ் சுப்ரமணியம் லவ் சீசன்: மேடையில் அசத்திய ரவி மோகன் – ஜெனிலியா!
சும்மா 4 வார்த்த, முடிச்சா ஒரு கப் காபி; மீண்டும் சந்தோஷ் சுப்ரமணியம் லவ் சீசன்: மேடையில் அசத்திய ரவி மோகன் – ஜெனிலியா!
நடிகர் ரவி மோகன், தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தற்போது அவர் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமையாளராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் விதமாக “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளார். ஆகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற இந்த தொடக்க விழா, திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட ஒரு பிரமாண்டமான நிகழ்வாக அமைந்தது.ரவி மோகன் ஸ்டுடியோஸின் தொடக்க விழா மிக விமரிசையாக நடைபெற்றது. கடந்த சில நாட்களாகவே இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வேகத்தில் நடைபெற்றன. இந்த விழாவில் நடிகர் கார்த்திக், சிவகார்த்திகேயன், யோகிபாபு, எஸ்.ஜே. சூர்யா, ஜெனிலியா உள்ளிட்ட பல முன்னணி திரை பிரபலங்கள் கலந்து கொண்டு ரவி மோகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த மேடையில்தான் ரவி மோகன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் 2025-2027 ஆண்டுகளுக்கு இடையில் வரவிருக்கும் படங்களின் விவரங்களை அறிவித்தார்.A post shared by Cineulagam (@cineulagamweb)இந்த விழாவின் ஒரு சிறப்பு நிகழ்வாக, ரவி மோகன் மற்றும் நடிகை ஜெனிலியா இணைந்து “சந்தோஷ் சுப்ரமணியம்” படத்தில் இடம்பெற்ற பிரபலமான ‘ஹா ஹா ஹாசினி’ காட்சியை மேடையில் மீண்டும் ரீ-க்ரியேட் செய்தனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது. இருவரும் டயலாக்கை மறக்காமல் அதே மாதிரியான சைகைகள் மற்றும் உச்சரிப்புடன் பேசியிருப்பது 17 வருடத்திற்கு பிறகு மீண்டும் அந்த படத்தை நினைவுப்படுத்தியுள்ளது.2008-ஆம் ஆண்டு வெளியான ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ திரைப்படம் ரவி மோகன் மற்றும் ஜெனிலியா ஆகிய இருவருக்கும் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. ஒரு இளைஞன் தனது தந்தையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு வாழ முயற்சிக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம், வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் ரீ-க்ரியேட் செய்யப்பட்ட காட்சி, பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்ததோடு, ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
