Connect with us

பொழுதுபோக்கு

‘முதலில் நான் ஒரு நடிகை, அதை எல்லோரும் மறந்துவிட்டார்கள் போல’: நடிகை ரீமா கல்லிங்கல் வருத்தம்!

Published

on

Reema k

Loading

‘முதலில் நான் ஒரு நடிகை, அதை எல்லோரும் மறந்துவிட்டார்கள் போல’: நடிகை ரீமா கல்லிங்கல் வருத்தம்!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை ரீமா கல்லிங்கல், ‘தியேட்டர்: தி மித் ஆஃப் ரியாலிட்டி’ (Theatre: The Myth of Reality) திரைப்படத்தில் அவர் சிறப்பாக நடித்ததற்காக, கேரளா திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:மலையாள திரையுலகில், தனித்துவமான கேரக்டர்கள் மற்றும் துணிச்சலான கருத்துக்கள் பேசி கவனம் ஈர்த்து வருபவர் நடிகை ரிமா கல்லிங்கல். சமீபகாலமாக, அவர் பிரதான திரைப்படங்களில் இருந்து விலகி, ‘லலன்னாஸ் சாங்’ போன்ற சுயாதீனமான படைப்புகளில் கவனம் செலுத்தி வந்தார். அவரது இந்த அர்ப்பணிப்புக்கு தற்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது. சஜின் பாபு இயக்கத்தில், ‘தியேட்டர்: தி மித் ஆஃப் ரியாலிட்டி’ (Theatre: The Myth of Reality) திரைப்படத்தில் அவர் சிறப்பாக நடித்ததற்காக, கேரளா திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார்.இந்த செய்தி திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அக்டோபர் 16, 2025 அன்று திரைக்கு வரவிருக்கும் இந்தப் படம், கேரளாவின் அற்றுப்போன பழக்கவழக்கங்கள் மற்றும் மர்மமான கூறுகளைப் பற்றியது. விருது வென்ற மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வந்த ரிமா கல்லிங்கல், பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளால் சற்று குழப்பமடைந்தார். ‘அம்மா’ (AMMA – Association of Malayalam Movie Artists) அமைப்பின் தலைமை மாற்றங்கள் குறித்து அவரது கருத்தை ஊடகங்கள் அதிகம் கேட்டன.பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என்பதை ரிமா ஆதரித்த போதிலும், தனது விருது குறித்த கேள்விகள் எதுவும் வரவில்லை என்பது அவரை ஆச்சரியப்படுத்தியது.  நான் ஒரு நடிகை. என் படத்திற்காக எனக்கு இப்போதுதான் விருது கிடைத்தது. ஆனால் என் படம் பற்றி ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை” என்று அவர் வருத்தத்துடன் கூறினார்.மேலும், ‘அம்மா’ அமைப்பிற்கு மீண்டும் திரும்புவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ரிமா கல்லிங்கல், “முதலில் நான் ஒரு கலைஞர்; இதை எல்லோரும் மறந்துவிட்டது போல் தெரிகிறது. என் வாழ்க்கையில் நான் இப்போது அந்த நிலையில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த வார்த்தைகள், ஒரு கலைஞரின் திறமையை விட, சர்ச்சைகள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் அளிப்பதைப் பற்றிய அவரது கவலையைப் பிரதிபலிக்கிறது.விருது வென்ற ஒரு கலைஞரிடம், அவரது படைப்பைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, அவரைச் சுற்றியுள்ள அரசியல் நிகழ்வுகளைப் பற்றி மட்டுமே பேசுவது, கலையின் மதிப்பைக் குறைத்துவிடுவதாக ரிமா தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன