இலங்கை
தேசபந்து தென்னக்கோனுக்கு பிணை!
தேசபந்து தென்னக்கோனுக்கு பிணை!
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு வெளிநாட்டுப் பயணம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் கோட்டா கோ கம போராட்டத்தைத் தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
