இலங்கை
ஒரே நேரத்தில் மோதி விபத்துக்குள்ளான 5 வாகனங்கள்
ஒரே நேரத்தில் மோதி விபத்துக்குள்ளான 5 வாகனங்கள்
கொழும்பு – திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, பன்வரன் வேவ பகுதியில் ஐந்து வாகனங்களுக்கிடையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கொழும்பிலிருந்து தம்புள்ளை நோக்கிச் சென்ற மூன்று வாகனங்களும் தம்புள்ளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற லொறி மற்றும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
