சினிமா
விநாயகர் சதுர்த்தியை தனியாக கொண்டாடிய ஹன்சிகா ..! கவனம் பெறும் இன்ஸ்டா ஸ்டேட்டஸ்
விநாயகர் சதுர்த்தியை தனியாக கொண்டாடிய ஹன்சிகா ..! கவனம் பெறும் இன்ஸ்டா ஸ்டேட்டஸ்
தெலுங்கு, தமிழ், ஹிந்தி என இந்தியத் திரையுலகில் பிரபல நடிகையாக காணப்படுபவர் ஹன்சிகா. இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது நீண்ட கால நண்பரான போதே சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார். சமீப காலமாகவே ஹன்சிகா தனது கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதன்படி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த கணவரின் போட்டோக்களையும் நீக்கிவிட்டார். இதனால் விவாகரத்து செய்தி உண்மைதான் என ரசிகர்களும் நம்பி வந்தனர். எனினும் ஹன்சிகா தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பிலான தகவல்களை இதுவரையில் தெரிவிக்காமல் இருந்தார். ஆனாலும் சமீபத்தில் திடீரென வீடியோ ஒன்றை வெளியிட்டு எனது வாழ்க்கை பற்றிய மக்களின் கருத்துக்களை நான் படிக்கும் போது சிரிப்புதான் வருகின்றது என்பதை காட்டும் விதமாக ஒரு எமோஜியை பகிர்ந்திருந்தார். இது ரசிகர்களை குழப்பம் அடையச் செய்தது. இந்த நிலையில், ஹன்சிகா தன்னுடைய கணவர் இல்லாமல் தனியாக விநாயகர் சிலையை எடுத்துச் சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் ஹன்சிகாவின் வீட்டில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதமாக அலங்கரிக்கப்பட்ட புகைப்படங்களையும் ஹன்சிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
