சினிமா
இசையால் ரசிகர்களை கவரும் ‘இட்லி கடை’..! ‘எஞ்சாமி தந்தானே’ பாடலின் லேட்டஸ்ட் அப்டேட்.!
இசையால் ரசிகர்களை கவரும் ‘இட்லி கடை’..! ‘எஞ்சாமி தந்தானே’ பாடலின் லேட்டஸ்ட் அப்டேட்.!
தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற கலைஞராக தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து வரும் தனுஷ், நடிகராக மட்டுமின்றி தற்போது இயக்குநராகவும் வெற்றிகரமாக பயணிக்கிறார். ஏற்கனவே மூன்று படங்களை இயக்கி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற தனுஷ், தற்போது ‘இட்லி கடை’ என்ற படத்தை உருவாக்கி வருகின்றார்.இந்தப் படம் தற்போது தயாரிப்பின் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்ற நிலையில், அதன் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. சமீபத்தில் வெளியாகிய ‘என்ன சுகம்’ பாடலுக்குப் பிறகு, தற்போது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கும் பாடல் ‘எஞ்சாமி தந்தானே’.’இட்லி கடை’ திரைப்படம், மக்கள் வாழ்கை, உணவு கலாசாரம் மற்றும் வாழ்க்கைப் பின்னணியில் நிகழும் சம்பவங்களை இயல்பாக சொல்லுகின்றது. இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்குமார். தனுஷுடன் ஏற்கனவே பல வெற்றிப் படங்களில் இணைந்துள்ள ஜி.வி, இந்தப் படத்திலும் தன்னுடைய தனித்துவத்தை காட்டியுள்ளார்.இப்படத்தின் முதல் பாடல் ‘என்ன சுகம்’, சமீபத்தில் வெளியாகி, இண்டர்நெட்டில் வைரலாகியுள்ளது. இந்த பாடலை தனுஷ் எழுதி, பிரபல பாடகி ஸ்வேதா மோகனுடன் இணைந்து பாடியுள்ளார். இதற்கான மெலடி டச் மற்றும் பாடல் வரிகளின் நெகிழ்ச்சி ரசிகர்களை ஈர்த்துள்ளது.இப்போது ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கும் பாடல் தான் ‘எஞ்சாமி தந்தானே’. இந்தப் பாடலுக்கான புரோமோ வீடியோ நேற்று (ஆகஸ்ட் 26) வெளியிடப்பட்டது. வெறும் 30 வினாடிகளுக்குள் பாடலின் energy, lyrics, beat அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பாடல் இன்று மாலை 5 மணிக்கு அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
