இலங்கை
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் பரீட்சைகள் மீள ஆரம்பம்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் பரீட்சைகள் மீள ஆரம்பம்!
ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் பரீட்சை இன்று (04.12) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சையை நவம்பர் 27ஆம் திகதி முதல் 06 நாட்களுக்கு ஒத்திவைக்க பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.
அதற்கமைய தற்போது வானிலையில் நிலவுகின்ற சீரான தன்மையை கருத்தில் கொண்டு மீண்டும் பரீட்சைகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இன்று (04) முதல் வரும் 20 ஆம் திகதிவரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.