இலங்கை
வெப்பம் உக்கிரம்!!!
வெப்பம் உக்கிரம்!!!
நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பம் அதிகரித்துக் காணப்படும் எனவும் அதுதொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இந்த நிலைமையை எதிர்பார்க்கலாம். குறித்த பகுதிகளில் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இந்த நிலைமைகளைத் தவிர்க்க, அதிக தண்ணீர் பருக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
