இலங்கை
மலேசிய இணை அமைச்சருக்கும் இ.தொ.கா தலைவருக்குமிடையில் சந்திப்பு!
மலேசிய இணை அமைச்சருக்கும் இ.தொ.கா தலைவருக்குமிடையில் சந்திப்பு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) தலைவர் செந்தில் தொண்டமான், மலேசிய பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் குலசேகரன் மற்றும் பிரதமரின் சிறப்பு செயலாளர் சண்முகம் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார்.
இச்சந்திப்பின்போது, இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையிலான நீண்டகால நட்பு உறவு நினைவுகூரப்பட்டது.
மேலும்,சர்வதேச அரசியல் அரங்கில் தமிழர்களின் நிலையான அடையாளத்தை உறுதிப்படுத்துவது மற்றும் தமிழ் மக்களின் எதிர்கால வளர்ச்சி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.[ஒ]
