இலங்கை
கூரை திருத்த முயன்றவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு!
கூரை திருத்த முயன்றவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு!
வீட்டின் கூரையைச் சீர்செய்ய முயன்ற இளைஞரொருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கோப்பாயைச் சேர்ந்த சந்திரசேகரம் பிரணவன் (வயது -25) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். கடந்த 11ஆம் திகதி மழை பெய்தபோது வீட்டில் ஒழுக்கு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து மறுநாள் வீட்டின் கூரையைச் சீர்செய்ய முயன்றபோது அவர் தவறிக் கீழேவீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தநிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.
