இலங்கை
சுகாதாரமின்றி இயங்கிய உணவகத்துக்குத் தண்டம்
சுகாதாரமின்றி இயங்கிய உணவகத்துக்குத் தண்டம்
வல்வெட்டித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயச் சூழலில் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்றுக்கு 25ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனையின்போது குறித்த உணவகத்தில் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊழியர்களை உணவகத்தில் அனுமதித்தமை, உணவகத்தில் கடமை புரியும் ஊழியர்கள் தனிநபர் சுகாதாரம் பேணாமை இலையான் பெருக இடமளித்தமை, குடிப்பதற்கும் சுத்திகரிப்புக்கும் பயன்படும் நீரானது குடிக்கத்தக்கது என உறுதி செய்ய தவறியமை ஆகியவை கண்டறியப்பட்ட நிலையில் உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது கடும் எச்சரிக்கை செய்யப்பட்டு 25ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
