இலங்கை
எம்.பி.யாகும் திட்டம் ரணிலிடம் இல்லை; ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிப்பு!
எம்.பி.யாகும் திட்டம் ரணிலிடம் இல்லை; ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிப்பு!
தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வருவதற்குரிய திட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தரான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ரவி கருணாநாயக்க, பைசர் முஸ்தபா ஆகிய தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் பதவி விலகி, ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடமளிக்கவுள்ளனர் எனவும், ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வருவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பில் கேட்டபோதே நவீன் திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
இந்த விவகாரம் பற்றி எதிரணிகளுக்கிடையில் கலந்துரையாடப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்கதான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பிரதான அச்சுறுத்தல். அதனால் தான் அவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
