Connect with us

பொழுதுபோக்கு

எஸ்.பி.பி இசையில் யேசுதாஸ் பாடிய மெகாஹிட் பாடல்: அந்த படத்துக்கு ஹீரோ, இசை ரெண்டும் எஸ்.பி.பி தான்!

Published

on

SPB

Loading

எஸ்.பி.பி இசையில் யேசுதாஸ் பாடிய மெகாஹிட் பாடல்: அந்த படத்துக்கு ஹீரோ, இசை ரெண்டும் எஸ்.பி.பி தான்!

இந்திய சினிமாவில், பல ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி பாடகராக வலம் வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியன், தான் இசைமைத்து ஹீரோவாக நடித்த ஒரு படத்தில் ஹிட் பாடலுக்காக, பாடகர் யேசுதாஸ் குரலில் பதிவு செய்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.தமிழ் சினிமாவில், பல ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி பாடகராக வலம் வந்தவர் தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியன். 1966-ம் ஆண்டு ஹோட்டல் ரம்பா என்ற படத்தில் பாடல் பாடியிருந்தார். இதுதான் எஸ்.பி.பி தமிழில் பாடகராக அறிமுகமான முதல் படம். ஆனால் இந்த படம் வெளியாகவில்லை. அதன்பிறகு எம்.ஜி.ஆர் நடிப்பில் 1969-ம் ஆண்டு வெளியான அடிமைப்பெண் படத்தில் ‘ஆயிரம் நிலவே’ பாடல் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார்,அதன்பிறகு, எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன் வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியன், எம்.எஸ.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். இவர் பாடிய பல பாடல்கள் இன்றும் அவரது நினைவை போற்றும் வகையில் அமைந்துள்ளது. அதன் தனி சிறப்பு என்று சொல்லலாம்.பாடல் மட்டும் அல்லாமல் தன்னுடள் பல திறமைகளை வைத்திருந்தவர் எஸ்.பி.பி.கமல்ஹாசனுக்கு ஒருசில படங்களில் டப்பிங் குரல் கொடுத்துள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பிரபு தேவாவின் காதலன், நாகர்ஜூனாவின் ரட்சகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பு பயணம், 70-களிலேயே தொடங்கிவிட்டது. ஒரு சில, தமிழ், மற்றும் தெலங்கு படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வந்த எஸ்.பி.பி, ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். அதேபோல், ரஜினி படத்திற்கே இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சி.வி.ஸ்ரீதர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த துடிக்கும் கரங்கள் படத்திற்கு எஸ்.பி.பி தான் இசை. அதன்பிறகு தெலுங்கில் ஒரு படத்திற்கு இசையமைத்திருந்தார். அடுத்து 1991-ம் ஆண்டு சிகரம் என்ற படத்திற்கு இசை அமைத்தார். அனந்து இயக்கிய இந்த படத்தில் ஹீரோவும் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் தான். ரேகா, ராதா, ரம்யா கிருஷ்ணன், சார்லி, நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் மொத்தம், 15 பாடல்கள் இடம் பெற்றிருந்தது. இதில் 6 பாடல்களை எஸ்.பி.பி. பாட அவரது சகோதரி எஸ்.பி.சைலஜா, 3 பாடல்களை பாடியிருந்தார். எஸ்.என்.சுரேந்தர், கே.எஸ்.சித்ரா ஆகியோர் தலா 3 பாடல்கள் பாடியிருந்தனர். இவர்கள் பாடிய அனைத்து பாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.அதே சமயம், இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் மட்டும் காலம் கடந்து இன்றுவரை பேசப்பட்டு வருகிறது. அந்த பாடல் தான் ‘அகரம் இப்போ சிகரம் ஆச்சு’ என்ற பாடல். இந்த ஒரு பாடலை மட்டும் எஸ்.பி.பி பாடவில்லை. கே.ஜே.யேசுதாஸ் இந்த பாடலை அசத்தலாக பாடியிருந்தார். தோல்வியில் துவண்டு கிடப்பவர்களுக்கு தைரியம் கொடுக்கும் வகையில் அமைந்த இந்த பாடல் இன்றும் பிரபலமான பாடலாக வலம் வருகிறது. எஸ்.பி.பி ஹீரோவாக நடித்து இசைமைத்த படத்தில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய ஒரு பாடல், பெரிய வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன