Connect with us

சினிமா

விஜயின் மதுரை மாநாட்டில் பவுன்சர்கள் தூக்கி வீசியது யாரை? வெடித்த சர்ச்சை..!

Published

on

Loading

விஜயின் மதுரை மாநாட்டில் பவுன்சர்கள் தூக்கி வீசியது யாரை? வெடித்த சர்ச்சை..!

மதுரையில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் தற்போது பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டின் போது முக்கியமான நிகழ்வாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ரேம்ப் வாக் செய்யும் போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மேடையை நோக்கி செல்ல முயன்ற நிலையில் பவுன்சர்கள் அவர்களை முன்னோக்கி வரவிடாது தடுத்தனர்.இதன்போது இளைஞர் ஒருவர் மேடையில் ஏற முற்பட்ட போது அங்கிருந்த பவுன்சர்கள் அந்த நபரை அப்புறப்படுத்த முயலும் பொழுது அந்த நபர் அந்த 10 அடி கொண்ட ரேம்பின் மேலிருந்து கீழே விழுந்துள்ளார்.இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் தன்னை பவுன்சர்கள் தாக்கியதாக கூறி தன் தாயுடன் பொலிஸ் நிலையம் சென்று விஜய் மீது முறைப்பாடு அளித்துள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உட்பட அங்கிருந்த 10 பவுன்சர்கள் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதேவேளை விழுப்புரம் பகுதியை சேர்ந்த மற்றுமொரு இளைஞனின் தாயொருவர், என் மகன் தான் ரேம்ப் மீது ஏற முயன்றபோது பவுன்சர்களால் தாக்கி கீழே விழுந்ததாக தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.இந்நிலையில், தற்போது அஜய் என்பவர், ரேம்ப்பில் இருந்து கீழே தள்ளியது என்னைதான் என்றும் சரத்குமார் பொய் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இதனால் உண்மையில் ரேம்ப் மீது ஏறியது யார் என்ற கேள்விகள் எழுந்த நிலையில், ராம்பின் மேலிருந்து கீழே இறக்கி விடப்படக்கூடிய காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே  விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த காணொளி தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணையதளத்தில வைரல் ஆகி இருக்கிறது.இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநட்டில் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டவர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவமானது விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் எதிர்வரும் நாட்களில் பொலிஸார் எந்த விதத்தில் சட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளனர் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன