சினிமா
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’…!டிரெய்லர், பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல்…!
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’…!டிரெய்லர், பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல்…!
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படமான ‘மதராஸி’, செப்டம்பர் 5ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் முதல் படம் என்பதாலும், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடுதலாக உள்ளது.இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத், இதற்கு முன்பாக பல ஹிட் பாடல்களை வழங்கியுள்ளார். அண்மையில் வெளியான ‘மதராஸி’ படத்தின் டிரெய்லர் பலரது பாராட்டைப் பெற்றது. பல மொழிகளில் வெளியான டிரெய்லர் யூடியூப்பில் 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் வெளியிடப்பட்டன. தற்போது, ‘மதராஸி’ படத்தின் முழு இசை ஆல்பமும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் உருவான பாடல்கள், ரசிகர்கள் மற்றும் இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
