Connect with us

இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நடு வீதியில் நேர்ந்த துயரம் ; தமிழர் பகுதியில் சம்பவம்

Published

on

Loading

மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நடு வீதியில் நேர்ந்த துயரம் ; தமிழர் பகுதியில் சம்பவம்

மருதமுனையை பிரதான வீதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,

Advertisement

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று காலை 6.00 மணிக்கு பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துயில் பெரிய நீலாவணையில் இருந்து கல்முனை மாநகர சபைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் பெரியநீலாவணை சரஸ்வதி வீதியில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையென தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர், கல்முனை மாநகர சபையில் காவலாளியாக பணியாற்றி வருபவர் அவர்.

Advertisement

 பெரியநீலாவணையில் அமைந்துள்ள கழிவகற்றல் நிலையத்தில் கடமையாற்றி விட்டு தனது வேலை முடிவுறுத்தல் பணிக்காக கல்முனை மாநகர சபைக்கு செல்லும் போது மருதமுனை பிரதான வீதியில் இந்த விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன