பொழுதுபோக்கு
பல பாட்டு பாடிய இளையராஜா; அவராலே இந்த பாட்டை பாட முடியல: வடிவேலு சொன்ன சம்பவம் எந்த பாடல் தெரியுமா?
பல பாட்டு பாடிய இளையராஜா; அவராலே இந்த பாட்டை பாட முடியல: வடிவேலு சொன்ன சம்பவம் எந்த பாடல் தெரியுமா?
இந்தியத் திரையிசை உலகில் ‘இசைஞானி’ எனப் போற்றப்படும் இளையராஜா, தனது இசையின் மூலம் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றவர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, பல்வேறு மொழிகளில் சாதனைகள் படைத்துள்ளார். இந்நிலையில் இவர் பாடுவதற்கு கஷ்டப்பட்ட ஒரு பாடல் பற்றி நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.இசைஞானி இளையராஜா என்றதும் நம் நினைவுக்கு வருவது ஆயிரக்கணக்கான பாடல்களும், லட்சக்கணக்கான ரசிகர்களும் தான். இசையால் எல்லோரையும் கட்டிப்போட்டிருக்கும் இவருக்குள் ஒரு உணர்ச்சிப்பூர்வமான மனம் உள்ளது என்பதை நடிகர் வடிவேலு ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ அன்நோடீஸ்டு யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வடிவேலு கூறுகையில், இளையராஜா ஒருமுறை தன்னால் ஒரு பாடலை முழுமையாகப் பாட முடியவில்லை என்று கூறியதாகத் தெரிவித்தார். காரணம், அந்தப் பாடல் வரிகள் அவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாக இருந்தனவாம். அந்தப் பாடலைப் பாடும்போது, வரிகளிலேயே லயித்து, நெகிழ்ந்துபோய் அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லையாம். இளையராஜா குறிப்பிட்ட அந்த பாடல் வரிகள் இவைதான்:”உன்ன போல ஆத்தா என்ன பெத்து போட்டா””அடி என்ன பெத்த ஆத்தா கண்ணீரதான் பார்த்தா”மேலும், அந்தப் பாடலின் சரணம் இதைவிடவும் நெஞ்சை உருக வைப்பதாக இளையராஜா கூறியதாக வடிவேலு தெரிவித்தார். அந்த சரணத்தில் இளையராஜா பாடிய சில வரிகளையும் வடிவேலு நினைவுபடுத்தினார்:”திட்டி திட்டி பேசினாலும் வட்டியில சோறுவப்பா””ஒட்டி போன உடம்புனாலும் உசுர விட்டு பாசவப்பா””தின்ன வாயில் திட்டினாலும் என்ன அவ நொந்ததில்ல இல்ல”1000 படங்களுக்கும் மேல் இசையமைத்து, பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளைப் பெற்றிருந்தாலும், அவரது இசைக்கு உயிர் கொடுப்பது அவரது இந்த உணர்ச்சிப்பூர்வமான இதயமே. வடிவேலு பகிர்ந்த இந்த நிகழ்வு, இசைஞானி ஒரு மாபெரும் கலைஞன் என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது. இன்றுவரை, இவரது இசை வெறும் ஒலியாக இல்லாமல், வாழ்வின் ஒவ்வொரு உணர்வையும் பிரதிபலிக்கும் ஓர் அனுபவமாகவே பார்க்கப்படுகிறது. வடிவேலு பகிர்ந்த இந்த நிகழ்வு, இசைஞானி ஒரு மாபெரும் கலைஞன் என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
