Connect with us

பொழுதுபோக்கு

படுத்த படுக்கை, 125 கிலோ இருந்த நான் 45 ஆகிட்டேன்; ஆனா அடுத்த 4 மாதத்தில் மிஸ்டர் மதுரை: ரோபோ சங்கர் ஓபன்!

Published

on

Robo Shankwe

Loading

படுத்த படுக்கை, 125 கிலோ இருந்த நான் 45 ஆகிட்டேன்; ஆனா அடுத்த 4 மாதத்தில் மிஸ்டர் மதுரை: ரோபோ சங்கர் ஓபன்!

தமிழில் சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாக இன்று காமெடி நட்சத்திரமாக உயர்ந்துள்ள ரோபோ சங்கர்,  உடல் நிலை சரியில்லாமல் 3 உடை குறைந்தாலும், 3 மாதங்களில் உடல் எடையை கூட்டி மிஸ்டர் மதுரை சாம்பியன் ஆனேன் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த ரோபோ சங்கர், விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார். அதற்கு முன்பே, விஜயகாந்த் நடித்த தர்ம சக்கரம், ரஜினிகாந்த் நடித்த படையப்பா, உள்ளிட்ட படங்களில் சிறுசிறு கேரக்டரில் நடித்து வந்த ரோபோ சங்கர், சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார்.மேலும், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள ரோபோ சங்கர், கடந்த ஆண்டு வெளியான ஜாலியோ ஜிம்கானா என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது செட்ட சொட்ட நனையுது என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உ்ளளது, இதனிடையே மற்றொரு படத்தில் நெகடீவ் கேரக்டரில் நடித்து வருவதாக நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ள ரோபோ சங்கர், தனது பல சம்பவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், வலைதளங்களில் இருந்து வரும் கருத்துக்கள் குறித்து நான் கண்டுகொள்வதில்லை. வேலை இருப்பவன் அவன் வேலையை பார்ப்பான், வேலை இல்லாதவன் தான் இந்த மாதிரி கமெண்ட்களை படித்துக்கொண்டு இருப்பான். நான் அந்த மாதிரி ஆள் இல்லை. அதேபோல் பொறமை என்பது இங்கு அதிகமாக இருக்கிறது. நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது நான் செத்துப்போய்விட்டேன் என்று மாலையுடன் பலர் என் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். நான் உயிர் பிழைத்து வந்தவுடன் இவன் எப்படி பிழைத்தான என்று பேசிக்கொண்டார்கள். இதை பற்றி கண்டுகொள்ளவே மாட்டேன். என் வேலையில் நான் கவனம் செலுத்தி வருகிறேன். ஜோடி நிகழ்ச்சியில் நான் ஆடும்போது 122 கிலோ. அப்போது ப்ரமோஷூட் எடுக்கும்போது என்னுடன் ஆட எந்த பெண்ணும் தயாராக இல்லை. கருப்பாக இருக்கிறார், குண்டாக இருக்கிறார், காமெடி பீஸ் அவருடன் நான் ஆட மாட்டேன் என்று பெண்கள் சொல்லிவிட்டார்கள். இதனால் நான் மட்டும் தனியாக ப்ரமோவில் ஆடியிருந்தேன். அதன்பிறகு இவர் கூட நான் ஆடுகிறேன் என்று வந்த பொண்ணு தான் சொய்ங் சொய்ங் பாடலில் ஆடிய பெண்.இந்த நிகழ்ச்சியின் இறுதியில் நான் ஆடினேன். செமி ஃபைனலில், பிரபுதேவா மாஸ்டரின் தம்பி நாகேந்திர பிரசாத்தும் ஆடினோம். அதில் அவர் எலிமினேட் ஆகி நான் வெற்றி பெற்றுவிட்டேன். அதேபோல் ஜான்டிஸ் வந்து படுத்த படுக்கையாக ஆகிவிட்டேன். இதில் 125 கிலோவில் இருந்து 45 கிலோவாக குறைந்துவிட்டேன். ஆனால் அடுத்த 3-வது மாதமே ஜிம்மில் வொர்க்அவுட் செய்து 7-வது மாதம் மிஸ்டர் மதுரை சாம்பியன் ஆனேன் என்று ரோபோ சங்கர் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன