Connect with us

இலங்கை

அம்பாறையில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்

Published

on

Loading

அம்பாறையில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் இன்று(28) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் திருமதி தெசீபா ரஜீபன் முன்னிலையில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் அடையாளம் காணப்பட்ட பல இடங்கள் தோண்டப்பட்டு வருகின்றன.

Advertisement

கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா- பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியை சேர்ந்த சந்தேக நபர் குறித்த பகுதிக்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டிருந்தார்.

அவர் கடந்த காலங்களில் திருக்கோவில் பகுதியில் தனியார் தொலைத்தாடர்பு சிம் விற்பனை முகவராக செயற்பட்ட அருளானந்தன் சீலன் என்பவரை கடத்தி படுகொலை செய்து குறித்த இடத்தில் புதைத்திருப்பதாக அரச சாட்சியாக மாறி குற்றப்பலனாய்வு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

இதன்போது குறித்த பிரதேசத்தை சுற்றி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உட்பட் பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் தடயவியல் பொலிஸார் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

Advertisement

எனினும் குறித்த நபரது வாக்குமூலத்திற்கமைய திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட பொது மயானத்தில் தேடுதல் மற்றும் தோண்டப்பட்ட பின்னர் எதுவும் கிடைக்காத காரணத்தினால் குறித்த செயற்பாடுகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன.

பின்னர் மற்றுமொருவரின் வாக்குமூலத்திற்கமைய இன்று மற்றுமொரு இடமான தம்பிலுவில் மயானத்தை அட்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன