இலங்கை
கச்சதீவு தொடர்பில் விஜய் தெரிவித்த கருத்துகளை கணக்கெடுக்கத் தேவையில்லை!
கச்சதீவு தொடர்பில் விஜய் தெரிவித்த கருத்துகளை கணக்கெடுக்கத் தேவையில்லை!
வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு
கச்சதீவு விவகாரம் தொடர்பான இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு மாறவில்லை. அதை இலங்கை விட்டுக்கொடுக்கப் போவதும் இல்லை. எனவே,விஜய்யின் கருத்தைக் கவனத்தில் எடுக்கவேண்டியதில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. கச்சதீவை மீளப்பெற வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூறியுள்ளமை தொடர்பில் அங்கு எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
கச்சதீவு இலங்கைக்குரிய தீவாகும். இந்த விடயத்தில் மாற்றம் இல்லை. தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, வாக்கு வேட்டைக்காக கச்சதீவு பற்றிப் பேசலாம். அவ்வாறு பேசுவதால் மாற்றம் வரப்போவதில்லை. எனவே. விஜயின் அறிவிப்புத் தொடர்பாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு மாறவில்லை. எக்காரணம் கொண்டும் கச்சதீவு இந்தியாவுக்கு வழங்கப்படமாட்டாது. அது இலங்கைக்குரியது – என்றார்.
