இலங்கை
தேர்தல் அறிவிப்பு வந்தால் எதிரணிக்கூட்டு உடையும்!
தேர்தல் அறிவிப்பு வந்தால் எதிரணிக்கூட்டு உடையும்!
அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவிப்பு
தேர்தல் அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டால் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவின் உறுதிப்பாட்டை விளங்கிக்கொள்ளலாம். ஊழலுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் ஊழல்வாதிகள் முன்னெச்சரிக்கையாக ஒன்றிணைந்துள்ளனர் என்று அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை மோசடி செய்தார். உயிர்த்த ஞாயிறுக்குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்துக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும் என்று கடந்த காலங்களில் அவர்மீது குற்றஞ்சாட்டியவர்கள் இப்போது ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் ஈடுபடுகின்றோம் என்று கூறுகின்றனர். எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு அரசாங்கத்துக்குச் சவால் அல்ல. சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்படவேண்டும். எவருக்கும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படக்கூடாது. சுயாதீன விசாரணைகளுக்கு அமையவே நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படுகின்றது. நீதிமன்றம் சுயாதீனமாகச் செயற்படுகின்றது. நீதிமன்றத்தின் உத்தரவைக் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக விமர்சிப்பது முறையற்றது – என்றார்.
