இலங்கை
இலங்கைக் குற்றக்கும்பல் இந்தோனேசியாவில் கைது
இலங்கைக் குற்றக்கும்பல் இந்தோனேசியாவில் கைது
இலங்கையின் ஒரு பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் இந்தோனேசியப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குழுவில் கொமாண்டோ சாலிந்த, பாணந்துறை நிலங்க, பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் பாதாள உலகக்குழு நபர்கள் உள்ளடங்குகின்றனர் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப்பொலிஸ் கண்காணிப்பாளருமான எப்.யு.வுட்லர் தெரிவித்தார்.
